Entertainment16 July 2026

அவர் தான் நம் முதல்வர் - ஜோசப் விஜய்க்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வரலட்சுமி

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்த அனுபவம் குறித்தும், அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் "மக்கள் 100 விதமான விடயங்களைப் பேசலாம். ஆனால் நாளின் முடிவில் ஜோசப் விஜய் தான் நம்முடைய முதல்வர், அவர் இங்கு நிலைத்து நிற்கவே வந்திருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சிப்பது எளிதானது என்றும், ஆனால் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவதற்கு அபாரமான தைரியம், மன உறுதி மற்றும் தமிழக மக்களின் அளப்பரிய அன்பு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முதலமைச்சரின் செயல்களைக் காலம் வெளிப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,ஜோசப் விஜய் என்ன சாதிக்கிறார் என்பதைப் பார்க்க மக்கள் சிறிது மரியாதையையும், ஊக்கத்தையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது கணவருடன் முதல்வர் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ள வரலட்சுமி, "சர்கார்" படப்பிடிப்புத் தளத்தில் அவரிடம் தான் பகிர்ந்து கொண்ட நினைவுகளைக் குறித்து சிரித்துப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எப்போதும் அன்பானவர் மற்றும் எளிமையானவர் என்று புகழாரம் சூட்டிய அவர், அவரது தலைமையில் தமிழக மக்கள் செழிக்க வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes