Entertainment23 July 2026

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் போஸ்டரில் "சஞ்சய் விஸ்வநாத்" (Sanjay Vishwanath) என்ற கதாபாத்திரத்தின் பெயருடன் நடிகர் சூர்யாவின் தோற்றம் இடம்பெற்றுள்ளது.

நடிகர் சூர்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes