Entertainment12 August 2026

"இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது" : நடிகை த்ரிஷாவின் பதிவு - இரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி!

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை த்ரிஷா, தனது பதிவுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவரது பதிவுகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள் வருவது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்” என்ற கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

எனினும், இந்தப் பதிவின் மூலம் அவர் யாரை அல்லது எந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இதனால், த்ரிஷாவின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேவேளை, இந்தப் பதிவின் பின்னணி என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், த்ரிஷா இதுகுறித்து ஏதேனும் விளக்கம் அளிப்பாரா என்பதே தற்போது இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes