Entertainment12 August 2026

இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்களை குவித்த தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் – தனுஷ் முதலிடம்!

2026ஆம் ஆண்டில் தமிழ் திரையுலக நடிகர்களால் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட Non-Reels பதிவுகளில், அதிக விருப்பங்களைப் பெற்ற பதிவுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷ் பகிர்ந்த ஒரு பதிவு 3.6 மில்லியன் விருப்பங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் பகிர்ந்த இரண்டு பதிவுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

விஜய்யின் ஒரு பதிவு 3.6 மில்லியன் விருப்பங்களுடன் இரண்டாம் இடத்தையும், மற்றொரு பதிவு 3.5 மில்லியன் விருப்பங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இதன்மூலம், 2026ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் தமிழ் திரையுலக நடிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற பதிவுகளில் தனுஷ் மற்றும் விஜய் முன்னிலை வகித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes