General12 August 2026

அரசாங்கம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கிறது - சஜித் சாடல்

அரசாங்கம் நீதித்துறையை முடக்கி, நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முனைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் எனக் சுட்டிக்காட்டிய அவர், "அரசாங்கம் நீதித்துறையைச் செயலிழக்கச் செய்து, அதன் மூலம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.



Related recommendation
Hiru TV News | Programmes