பிரபல நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, தனது இரண்டாவது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுபூர்வமான வாழ்த்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
"என்னால் உனக்கு ஒரு பரிசு கொடுக்க முடியும் என்றால், என் கண்களால் உன்னையே நீ பார்க்கும் திறனைத்தான் கொடுப்பேன்.
அப்படிப் பார்த்தால், நான் சிரிக்கவே மறந்துவிட்டேன் என்று நினைத்த நேரத்திலும் என்னைச் சிரிக்க வைத்து, அந்தச் சிறுவனை நீ பார்ப்பாய். உன் சகோதரனுக்கு ஒரு பாறை போல் உறுதியான துணையாக நிற்பதையும், எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக அவன் அருகில் இருப்பதையும் காண்பாய்.
அப்படிப் பார்த்தால், நான் சிரிக்கவே மறந்துவிட்டேன் என்று நினைத்த நேரத்திலும் என்னைச் சிரிக்க வைத்து, அந்தச் சிறுவனை நீ பார்ப்பாய். உன் சகோதரனுக்கு ஒரு பாறை போல் உறுதியான துணையாக நிற்பதையும், எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக அவன் அருகில் இருப்பதையும் காண்பாய்.
இந்த நன்னாளில் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை, உனது குழந்தை பருவத்தை நினைக்கும் பொழுது வாழ்க்கையில் இருந்த கஷ்டங்களையும், உனக்கு கிடைக்காமல் போன விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாதே என்பதே. அதற்கு பதிலாக உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்.
சிரிப்பு, தூக்கமில்லாமல் கழித்த இரவுகள், சின்னச் சின்னப் பயணங்கள், அர்த்தமே இல்லாமல் செய்த அந்த முட்டாள்தனமான சந்தோஷமான விஷயங்கள் ஆகியவற்றை நினைவுகூர்.
சிரிப்பு, தூக்கமில்லாமல் கழித்த இரவுகள், சின்னச் சின்னப் பயணங்கள், அர்த்தமே இல்லாமல் செய்த அந்த முட்டாள்தனமான சந்தோஷமான விஷயங்கள் ஆகியவற்றை நினைவுகூர்.
எப்பொழுதும் உனக்காக இருந்த ஒரு வீடு, இந்த இரண்டு மகன்களுக்காக மலைகளையே நகர்த்தத் தயாராக இருந்த ஓர் அம்மா... தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஐயா! நீ என் இரண்டாவது இதயம், ஆனால் அன்பில் ஒருபோதும் இரண்டாவது இல்லை. எப்பொழுதும் என் அதிசயம் நீதான்."
இவ்வாறு ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான வாழ்த்துப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
Latest News
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026
இலங்கை - இந்திய டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அறிமுகம்!
Local
14 August 2026
சுற்றுலா வருவாய் சரிவு: ஆறுதலளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்!
Local
14 August 2026
டிக்வெல்லவின் மீள்வருகை - பின்னணி காரணத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா
Local
14 August 2026
இன்ஸ்டா பதிவின் பின்னணியில் 2 ஆண்டுகால வலி: நிவின் பாலி கூறியதை மீண்டும் பகிர்ந்த அனுபமா
Local
14 August 2026
ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?
Local
14 August 2026
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Local
14 August 2026
"விஸ்வநாத் & சன்ஸ்" மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்: நடிகர் கார்த்தி புகழாரம்!
Local
14 August 2026