Sports17 July 2026

ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் ஸ்ரேயஸ் ஐயர் 66 ஓட்டங்களையுப் விராட் கோலி 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தநிலையில் 234 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes