2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடர், களத்தில் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, சமூக ஊடகங்களில் அவர்களைப் பெரும் நட்சத்திரங்களாகவும் மாற்றியுள்ளது.
இதன்படி நோர்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் தனது யதார்த்தமான பதிவுகளால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
கடந்த 30 நாட்களில் மாத்திரம் அவர் சுமார் 29 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார்.
மேலும் வோசினியா, ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கோல்களைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், இவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 29.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அத்துடன் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் தனது மனநலம் குறித்த வெளிப்படையான கருத்துக்களால் அனைவரது அன்பையும் பெற்று, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
ஸ்பெயின் அணி வீரர் லமின் யமால் மைதானத்திலும், குடும்பத்தினருடனான நெருக்கமான தருணங்களை பகிர்ந்து கொள்வதிலும் தனித்து நிற்கும் இந்த 19 வயது இளைஞர், 49.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
மேலும் நியூசிலாந்து வீரர் டிம் பெயின் ஆர்ஜென்டினாவினரின் வைரல் காணொளியினால், 5,000 பின்தொடர்பவர்களிடமிருந்து 5.8 மில்லியனாக உயர்ந்து, இந்த தொடரின் மிகவும் எதிர்பாராத வைரல் நட்சத்திரமாக மாறியுள்ளார்.
களத்திறமை மற்றும் தனிப்பட்ட கதைகள் மூலம் இந்த வீரர்கள் உலகக் கிண்ணக் காலத்தில் சமூக ஊடகங்களில் புதிய சகாப்தத்தைப் படைத்து வருகின்றனர்.
Latest News
வலுக்கட்டாயமாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்டாரா சோனம் வாங்சுக்?
Local
19 July 2026
சர்வதேச தூதுக்குழு களத்தில் : செம்மணி விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்!
Local
19 July 2026
ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா : நடக்கப்போவது என்ன?
Local
19 July 2026
இன்று வெளியே செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? : பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
19 July 2026
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம் : முக்கிய காரணம் இது தான்..!
Local
19 July 2026
பிலியந்தலையில் துப்பாக்கிச்சூடு : போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்!
Local
19 July 2026
வரி செலுத்தாதோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
19 July 2026
இரத்மலானை குடியிருப்பு வளாகத்தில் தீப்பரவல் – தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
Local
19 July 2026
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் - வரலாறு படைத்த எம்பாப்பே
Local
19 July 2026
மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!
Local
19 July 2026