Sports19 August 2026

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லே (Headingley) மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இடைக்கால அணித்தலைவராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜோ ரூட் (Joe Root) நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தெரிவு செய்தார்.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம் (Babar Azam) இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) பாகிஸ்தான் அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஜோ ரூட் மீண்டும் அணித்தலைவராக செயற்படுவதோடு மார்கஸ் டிரெஸ்கோதிக் (Marcus Trescothick) இங்கிலாந்து அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராகச் செயற்படுகின்றார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes