International27 December 2019

விபத்துக்குள்ளான விமானம் - பயணிகள் 100 பேருடன்..

கசகஸ்தானில் 98 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
அந்த நாட்டு நேரப்படி அல்மாட்டி விமானநிலையத்திலிருந்து இன்று பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு அவசர பிரிவின் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதோடு 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 60 பேர் அந்த நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியிலிருந்து தலைநகராக நர்வுல்தான் நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகின்றது.
 
விமானத்தில் 93 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Related recommendation
Hiru TV News | Programmes