General14 September 2025

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 
 
தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
 
வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes