
இஸ்ரேல் நடத்தி வரும் போரில் காசா மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2023 ஒக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் பலியாகினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் இராணுவம் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது ஒரு இனப்படுகொலை என என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் நேற்று (19) போராட்டம் நடத்தினர்.
இதில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "ஒரு அநியாயத்திற்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால் நாங்கள் அரசியல் தான் பேசுவோம்.
நாம் மௌனமாக இருந்தால் பாதிப்புகள் மோசமாகவே இருக்கும். ஒரு கவிஞன் சொன்னான், எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும். பறவைகளின் சத்தம் எனக்குக் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும் என்கிறான்.
ஒரு மனிதனின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தால் மௌனமாக இருந்தால் கூட அது சரியாகிவிடும். ஆனால், ஒரு நாட்டிற்கு நாட்டு மக்களுக்குக் காயம் ஏற்படும்போது மற்றவர்கள் அமைதியாக இருந்தால் அந்தக் காயம் அதிகரிக்கவே செய்யும். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும். வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மௌனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்றார்.
Latest News
கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
Local
20 September 2025

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா
Local
20 September 2025

லண்டன் தொடருந்து வலையமைப்பில் ஒரே நாளில் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது
Local
20 September 2025

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி பார்க்க முயற்சிப்பதாக ரணில் குற்றச்சாட்டு
Local
20 September 2025

ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
Local
20 September 2025

பெண் சாரதிகளுக்கு விமானப் பணிப்பெண்களைப் போல சீருடை - பிமல் ரத்நாயக்க
Local
20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்
Local
20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்
Local
20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை
Local
20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்
Local
20 September 2025
