General04 October 2025

திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - சி.வீ.கே.சிவஞானம்

உணவுத்தவிர்பை மேற்கொண்டு உயிர்நீத்த திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என இலங்கைத் தமிழரசுக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 
 
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 
 
இந்த நிலையில், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். 
 
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். தற்போது தீபங்களுக்கு முன்பாக தலை குனிந்து நிற்பவர்கள் தம்மை தியாகிகளாக நினைக்கின்றனர். 
 
இதில் யார் யார்? இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது தனக்கு தெரியும் எனவும், சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes