International11 October 2025

காசாவில் ஊசலாடும் பிஞ்சுகளின் உயிர்

காசாவில் குழந்தைகள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து உதவி மையங்களையும் திறக்க யுனிசெப் அழைப்பு விடுத்தது.

பல மாதங்களாக சரியான உணவு இல்லாமல் குழந்தைகள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரிக்கார்டோ பைரஸ் குறிப்பிட்டார்.

குழந்தைகள் நீண்ட காலமாக முறையாக உணவை எடுத்துக் கொள்ளாததால் தற்போது அவர்கள் முறையாக உணவை எடுத்துக் கொள்வதில் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரிக்கார்டோ பைரஸ் கூறினார்.

போர் நிறுத்தத்தின் முதல் 60 நாட்களில் காசாவின் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவியை அதிகரிக்க ஐ.நா திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related Recomands
Hiru TV News | Programmes