நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் இன்று (20) கடுமையான போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாளை தினம் (21) திட்டமிடப்பட்டிருந்த பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலன மற்றும் இஹல, கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையில், தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமை மற்றும் பாதைக்கு அருகில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டமையாலும் தொடருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இஹல, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளமையால் குறித்த மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த 18 தொடருந்து சேவைகளை ரத்து செய்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கண்டி ,மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரை நாளை (21) காலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்நு சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 04.30 மணிக்கு இயக்கவிருந்த கண்டி - கொழும்பு கோட்டை தொடருந்து , காலை 04.50 மணிக்கு இயக்கவிருந்த மாத்தளை - கொழும்பு கோட்டை தொடருந்து, காலை 05.00 மணிக்கு இயக்கவிருந்த கண்டி - பெலியத்த தொடருந்து மற்றும் காலை 06.15 மணிக்கு இயக்கவிருந்த, கண்டி - கொழும்பு கோட்டை ஆகிய தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Latest News
ரீல்ஸ் மட்டும்தான் வந்தது, முதலீடு வரவில்லை - முதலமைச்சர் விஜய் மீது பாயும் விமர்சனங்கள்
Local
18 September 2026
"அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!
Local
18 September 2026
வடகிழக்கு பாகிஸ்தானில் அதிர்ச்சி: பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம்! - 17 பேர் உயிரிழப்பு
Local
18 September 2026
அஜித்தின் புதிய திரைப்படம் - அடுத்தடுத்து விலகும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
Local
18 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்
Local
18 September 2026
அனைத்து சாதனைகளும் தகர்க்கப்பட்டன! மலையாள திரையுலகின் புதிய வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'!
Local
18 September 2026
வில்பத்து தேசிய பூங்கா எல்லையில் மருத மரங்கள் எரிப்பு - உடனடி விசாரணைக்கு சுற்றாடல் அமைச்சு உத்தரவு!
Local
18 September 2026
நடிகர் ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை? – வெளியான தகவலால் பரபரப்பு
Local
18 September 2026
ஒரு நூற்றாண்டில் ஒரே முறை! நிலவில் உருவான புதிய பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
18 September 2026
விமல் வீரவன்சவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாக உள்ளதா என விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு!
Local
18 September 2026