General25 October 2025

10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொடர்ந்தும் மழைபெய்யுமாயின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes