General13 November 2025

டெல்லி தாக்குதல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட கருத்து

இந்தியாவின், டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது, ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
 
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவும் உதவியளிக்க தயாராக உள்ளதாகவும், அமெரிக்க வெளி விவகார அமைச்சர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார். 
 
எனினும், இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
முன்னதாக டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10 ஆம் திகதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற சிற்றூந்து ஒன்று வெடித்துச் சிதறியது. 
 
இதன்போது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 
 
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes