General17 September 2026

100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் - வர்த்தகருக்கு மரண தண்டனை

சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 மே 17 ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமையே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

Related recommendation
Hiru TV News | Programmes