General17 September 2026

மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு

மாலபே காவல்துறை பிரிவுக்குட்பட்ட துணதஹென பகுதியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 145 T-56 துப்பாக்கி ரவைகள் மற்றும் ஒரு ஜோடி கைவிலங்கு என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் “பத்தரமுல்ல பன்டி” என்பவருடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes