General19 November 2025

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 327,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 
 
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes