உலகளவில் கடவுச்சீட்டுகளின் பலம் மற்றும் விசா அணுகலைத் துல்லியமாக மதிப்பிடும் 'பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ்' (Passport Reports) தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையின் கடவுச்சீட்டு 53 நகர்வு மதிப்பெண்களைப் (Mobility score) பெற்றுள்ளது.
இதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் 15 நாடுகளுக்கு விசா இன்றியும், 34 நாடுகளுக்கு வருகைக்கால விசாவிலும் (Visa on Arrival), 4 நாடுகளுக்கு மின்னணு பயண அனுமதி (ETA) மூலமாகவும் பயணம் செய்ய முடியும்.
இருப்பினும், 145 நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன்பாக விசா பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்த பட்டியலில், ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் முதலிடத்தைப் பிடித்து மிகச் சிறந்த கடவுச்சீட்டாக உருவெடுத்துள்ளது.
சிங்கப்பூர் 2ஆம் இடத்தையும், ஸ்பெயின் 3ஆம் இடத்தையும், மலேசியா 4ஆம் இடத்தையும், லக்சம்பர்க் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
பிராந்திய மற்றும் அண்டை நாடுகளின் தரவரிசையைப் பார்க்கையில்,இந்தியா 131ஆவது இடத்திலும், சீனா 97ஆவது இடத்திலும், ரஷ்யா 75ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 183ஆவது இடத்திலும் உள்ளன.
மியான்மார் (168), நேபாளம் (171), எத்தியோப்பியா (173), லிபியா (175) ஆகிய நாடுகள் இலங்கைக்கு நெருக்கமான தரவரிசையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையின் கடன் தரப்படுத்தலை 'B-' ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!
Local
22 September 2026
சுரேஷ் சலேவை 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் வைத்திருக்க பரிந்துரை
Local
22 September 2026
ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை: அனோஜனை காப்பாற்ற ஜனாதிபதி விசேட நடவடிக்கை - சபையில் அமைச்சர் அறிவிப்பு
Local
22 September 2026
சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
Local
22 September 2026
திடீரென சரிந்த தங்கத்தின் விலை : நகைப் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!
Local
22 September 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மூவர் கைது – கிரிஉல்லையில் துப்பாக்கிச்சூடு
Local
22 September 2026
கிரிக்கெட் மறுசீரமைப்பு: புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை ஒப்புதல்
Local
22 September 2026
இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Local
22 September 2026
சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு : உணர்ச்சிபூர்வமாக அறிமுகமான சிறப்பு ஜெர்சி!
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பமானது!
Local
22 September 2026