மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் தொடர்ச்சியாகக் கட்டாக்காலி மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துகளினால் உயிரிழப்புக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஏறாவூர்பற்று - செங்கலடி பிரதேச சபையின் கூட்டத் தீர்மானத்திற்கு அமைய குறித்த பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்று மாலை நடைபெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது 10 மாடுகள் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு 5000 ரூபாய் அடிப்படையில் தண்ட பணம் பெறப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது தண்ட பணம் செலுத்திய உரிமையாளர்களிடம் மாடுகள் வழங்கப்பட்டன.

Latest News
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகங்கள்!
Local
20 September 2026
நுவரெலியாவுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை : 6 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
20 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை!
Local
20 September 2026
தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கைது : பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Local
20 September 2026
ஐரோப்பாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்: நேட்டோ நாடுகளுக்கு பேரதிர்ச்சி!
Local
20 September 2026
அச்சமடைய மாட்டோம்" - தென்சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கொந்தளிப்பு!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி முடிவு: தரவு கேபிள்கள் அமைக்க இனி தெஹ்ரானின் அனுமதி கட்டாயம்!
Local
20 September 2026
முறைகேடுகள் மற்றும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
Local
20 September 2026
"அமைதியான காசாவாக" மாறும் கியூபா: அமெரிக்காவின் தடைகளால் உருக்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை!
Local
20 September 2026
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம்: ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!
Local
20 September 2026