General22 November 2025

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாகப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. 
 
களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், மேலும் மழை தொடர்ந்து வருகிறது. 
 
இதன்காரணமாக, இன்று மாலை 3 மணிமுதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதன் தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, புளத்சிங்கள, மதுராவெல, மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை மற்றும் மகுரு கங்கையை அண்டிய தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, அந்தத் தாழ்வான பகுதிகள் வழியாகச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கும் தீவிர அபாயம் உள்ளதால், அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes