General23 November 2025

பணிப்புறக்கணிப்பில் சரக்கு தொடருந்து சாரதிகள்

சரக்கு தொடருந்துகள் மற்றும் எரிபொருள் தொடருந்துகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 
 
அதன்படி, இன்று நள்ளிரவு முதல், சேவைகளிலிருந்து விலகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார். 
 
இரவு நேர தொடருந்து பயணங்களின் போது அதிகளவான யானைகள் தொடருந்தில் மோதி உயிரிழக்கின்றன. 
 
இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
இந்தநிலையில், தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்காததால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சரக்கு தொடருந்துகள் மற்றும் எரிபொருள் தொடருந்துகளின் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes