General24 November 2025

பொலிவூட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

பொலிவூட் நடிகரும், நடிகை ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா தனது 89 ஆவது வயதில் காலமானார். 
 
சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. 
 
இதனிடையே , நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். 
 
இந்தநிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை மீண்டும் மோசமான நிலையில், அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes