General01 December 2025

றம்பொடயில் சிக்கித் தவித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை மீட்ட விமானப்படை

அதிதீவிர வானிலை காரணமாக நுவரெலியாவின் றம்பொட பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவை விமானப்படை மீட்டுள்ளது. 
 
இவ்வாறு மீட்கப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அதன்படி, இந்தக் குழுவில் 11 இந்தியச் சுற்றுலாப் பயணிகள், 04 தென்னாப்பிரிக்கச் சுற்றுலாப் பயணிகள், 02 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள், 02 பிரித்தானியச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 02 ஸ்லோவேனிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். 
 
இந்த சுற்றுலாப் பயணிகள் குழு நேற்று (30) மதியம் உலங்கு வானூர்தி மூலம் கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes