General03 December 2025

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, பதுளை மாவட்டத்தில், பதுளை, ஹப்புத்தளை, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை, மீகஹகிவுல, ஊவ பரணகம, வெலிமட, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, சொரணாதோட்டை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
கண்டி மாவட்டத்தில், உடபலாத, கங்கவட்ட கோரளை, உடுதும்புர, தொழுவ, மினிபே, பாதஹேவாஹெட்ட, மெததும்புர, தெல்தோட்டை, அக்குரணை, கங்க இஹல கோரளை, பாததும்புர, யட்டிநுவர, தும்பனே, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஸ்பாகே கோரளை, பன்வில, ஹதரலியத்த மற்றும் குண்டசாலை ஆகிய பிரிவுகளுக்கும், 
 
கேகாலை மாவட்டத்தில், மாவனெல்லை, ரம்புக்கனை, அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, வரக்காபொல மற்றும் தெரணியகல ஆகிய பிரிவுகளுக்கும், 
 
குருநாகல் மாவட்டத்தில், ரிதிகம, மாவத்தகம, மல்லவபிட்டிய, நாரம்மல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரிவுகளுக்கும், 
 
மாத்தளை மாவட்டத்தில் நாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல மற்றும் லக்கல - பல்லேகம ஆகிய பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
நுவரெலியா மாவட்டத்தில், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, நுவரெலியா, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, தலவாக்கலை மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes