General23 September 2026

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், குற்றவாளியாகக் காணப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 ஏப்ரல் 21 அன்று கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியது, அவற்றுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியது உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தண்டனை பெற்ற 15 பேரின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் 24 பேர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தண்டனை பெற்றுள்ளனர். மீதமுள்ள 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes