General23 September 2026

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும்இ கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் தனித்தனியாகத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது
இதன்படிஇ குற்றவாளிகள் 15 பேருக்கும் தலா 200 ஆண்டுகள் முதல் 260 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்இ அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 குற்றவாளிகளுக்கு தலா 200 ஆண்டுகள்
5 குற்றவாளிகளுக்கு தலா 220 ஆண்டுகள்
4 குற்றவாளிகளுக்கு தலா 240 ஆண்டுகள்
1 குற்றவாளிக்கு 260 ஆண்டுகள்

தண்டனை பெற்றவர்களின் விபரம்:
1ஆம் பிரதிவாதி: மொஹமட் நௌபர் மௌலவி - 220 ஆண்டுகள்
2ஆம் பிரதிவாதி: மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பே (கபூர் மாமா) - 240 ஆண்டுகள்
3ஆம் பிரதிவாதி: ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் - 240 ஆண்டுகள்
4ஆம் பிரதிவாதி: மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா - 240 ஆண்டுகள்
5ஆம் பிரதிவாதி: மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் - 240 ஆண்டுகள்
6ஆம் பிரதிவாதி: மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் - 200 ஆண்டுகள்
7ஆம் பிரதிவாதி: மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் - 200 ஆண்டுகள்
8ஆம் பிரதிவாதி: அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ் - 260 ஆண்டுகள்
9ஆம் பிரதிவாதி: மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் - 220 ஆண்டுகள்
10ஆம் பிரதிவாதி: அப்துல் லதீஃப் மொஹமட் சாஃபி - 220 ஆண்டுகள்
11ஆம் பிரதிவாதி: ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர் - 200 ஆண்டுகள்
15ஆம் பிரதிவாதி: மொஹமது ஹனீஃபா செய்னுல் ஆப்தீன் - 200 ஆண்டுகள்
16ஆம் பிரதிவாதி: மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ் - 220 ஆண்டுகள்
18ஆம் பிரதிவாதி: ராசிக் ரசா ஹுசைன் - 220 ஆண்டுகள்
19ஆம் பிரதிவாதி: கச்சி மொஹமட் மொஹமட் ஜெம்சித் - 200 ஆண்டுகள்
இந்தத் தீர்ப்பின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த சட்ட நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes