H1B மற்றும் H4 விசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான், மியான்மார், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு புதியதொரு நடைமுறையை அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ளது.
அதன்படி H1B மற்றும் H4 விசா விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை அனைவரும் பார்க்கும் வகையில் ‘பொது’வில் வைக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர்களுடைய வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
வீதியில் கிடைத்த தங்க நகையைக் காவல்துறையிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் சேர்த்த பொகவந்தலாவ இளைஞர்கள்
Local
20 September 2026
"120 நாட்களில் மதிப்பிட முடியாது... ஒரு வருடம் பொறுத்திருங்கள்" : முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து!
Local
20 September 2026
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்
Local
20 September 2026
"ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன்" : நடிகை ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேச்சு!
Local
20 September 2026
கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு (சிவப்பு) எச்சரிக்கை
Local
20 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிக ஓட்டங்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!
Local
20 September 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது இந்தியா
Local
20 September 2026
ICC இருபதுக்கு 20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து!
Local
20 September 2026
மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!
Local
20 September 2026
மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026