General06 December 2025

அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தேயிலை தொழில்

இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை தொடர்ந்து, தேயிலைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சேதமடைந்த இயந்திரங்களை பழுதுபார்க்க வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருப்பதாலும், வீதிகளில் ஏற்பட்ட சேதம் தேயிலை ஏற்றுமதியை பாதிக்கக்கூடும் எனவும் கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
இதனால் தேயிலைத் தொழில் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தேயிலை பைகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. 
 
முழு ஆய்வுக்குப் பின்னர், மொத்த சேதம் மதிப்பிடப்படும் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 
 
அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் உதவி அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes