எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதனைச் செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கவுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காகத் தனிப்பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதன் கீழ் அனுமதியற்ற கட்டுமானங்களின் போதான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் பாவனைக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துமாறும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக்கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த துல்லியமான தரவுகளைப் பராமரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், அந்தச் சட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், கால்நடை பண்ணைகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுகின்றன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Latest News
யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!
Local
22 September 2026
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க பொது மன்னிப்பு வழங்குக: இலங்கை ஊடக அமைப்புகள் கூட்டுக் கோரிக்கை!
Local
22 September 2026
அப்புத்தளையில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
22 September 2026
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துகள் அரசியலமைப்பு முரணானது என அறிவிப்பு!
Local
22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!
Local
22 September 2026
ரூ.81 இலட்சம் கையூட்டல் பெறப்பட்ட விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது!
Local
22 September 2026