General09 December 2025

இடிந்த பாலத்தை இணைக்கும் இந்தியா!

மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த இரணைவில் பாலத்திற்குப் பதிலாக, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட புதிய பெயிலி பாலம் (Bailey Bridge) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
 
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் புதிய பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (08) பாலத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். 
 
பாலம் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளை உடனடியாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். 
 
குறித்த பணியை ஒருங்கிணைந்த பொறிமுறையின் கீழ் விரைந்து நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes