General11 December 2025

ரஷ்யாவின் சந்தை கட்டடம் ஒன்றில் தீப்பரவல் - ஒருவர் பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய சந்தையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்களுடன் , குறித்த கட்டடத் தொகுதி முழுவதும் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
அச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி புகையில் சூழ்ந்தையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததுள்ளனர். 
 
இந்த தீப்பரவலில் சந்தை கட்டடத்தின் பெரும் பகுதி தீக்கிரையானதுடன் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes