General12 December 2025

டி20 போட்டியில் மோசமான சாதனை படைத்த அர்தீப் சிங்

இந்திய மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 51 ஓட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
 
முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து, 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது. 
 
இந்தநிலையில், இந்தப்போட்டி நடைபெற்ற புதிய சண்டிகர் மைதானத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததன் காரணமாக, முதலில் பந்து வீச்சில் ஈடுபட்ட, இந்திய பந்து வீச்சாளர்கள், தமது பந்துவீச்சை நிலைப்படுத்தப்படுத்த முடியாமல், அதிகமான வைட் என்ற அகலப்பந்துகளை வீசினர். 
 
அதில் அர்தீப் சிங் மாத்திரம் 07 அகலப்பந்துகளை வீசியுள்ளார். 
 
இதன்படி, தமது ஓவர் ஒன்றில் 13 பந்துகளை வீசும் நிலைக்கு அர்தீப் சிங் உள்ளானார். 
 
இந்தநிலையில் சர்வதேச 20க்கு20 போட்டி ஒன்றின் ஒரு ஓவரில் 13 என்ற அதிக எண்ணிக்கையான பந்துகளை வீசிய, பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக் இதுவரை பதிவாகியிருந்த நிலையில், அர்தீப் சிங் அந்த மோசமான சாதனையை பகிர்ந்து கொண்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes