General15 December 2025

நாளை முதல் மழை அதிகரிக்கும்! - மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது

நாட்டில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
அத்துடன், இன்றைய தினம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
அதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, கங்க இஹல கோறளை, உடுதும்பர, மீடதும்பர மற்றும் மினிப்பே ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன், குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலக பிரிவுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீக்கப்பட்டுள்ளது. 
 
அதேநேரம் கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இதேவேளை, அதிதீவிரமான வானிலை காரணமாக 644 பேர் உயிரிழந்துள்ளதுடன், 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes