General16 December 2025

தடைகளைத் தகர்த்து மீண்டது பதுளை - ஹப்புத்தளை தொடருந்து மார்க்கம்

சமீபத்தில் தாக்கிய டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பதுளை-ஹப்புத்தளை தொடருந்து சேவை, 18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கத் தயாராக உள்ளதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க அறிவித்துள்ளார். 
 
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, "நேற்று (15) பதுளை தொடருந்து நிலையத்தில் இருந்து ஹப்புத்தளை தொடருந்து நிலையம் வரை பரீட்சார்த்த தொடருந்து வெற்றிகரமாகப் பயணித்தது என குறிப்பிட்டுள்ளார். 
 
இது பேரிடருக்குப் பின் தொடருந்து சேவைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் வெற்றியைப் பறைசாற்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
"இந்த சவாலான பணியை நிறைவேற்ற சோர்வின்றி உழைத்த இலங்கை தொடருந்து திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes