எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அபுதாபியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) இனிதே நிறைவுற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில், 10 அணிகளும் தலா 25 வீரர்களைக் கொண்ட முழுமையான பலத்துடன் எதிர்வரும் தொடருக்குத் தயாராகியுள்ளன.
சாதனை படைத்த கெமரூன் கிரீன்
இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி சகலதுறை வீரர் கெமரூன் கிரீன் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
கடும் போட்டிக்கு மத்தியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அவரை 25.20 கோடி இந்திய ரூபாய்க்குத் தன்வசப்படுத்தியது.
அத்துடன், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை 18 கோடி இந்திய ரூபாய்க்கும், பங்களாதேஷ் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய்க்கும் கேகேஆர் நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது.
அதிரடி காட்டிய அணிகள்
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணி யாரும் எதிர்பாராத விதமாக இளம் இந்திய வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகியோரை தலா 14.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோனை 13 கோடி ரூபாய்க்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஜோஷ் இங்லிஸை 8.60 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன.
மேலும், டெல்லி கெப்பிடல்ஸ் அணி ஆஹிப் நபி தாரை 8.40 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரவி பிஷ்னோயை 7.2 கோடி ரூபாய்க்கும் ஒப்பந்தம் செய்தன.
அணிகளின் தற்போதைய பலம்
இந்த ஏலத்தில் மொத்தமாக 215.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஏலத்தின் முடிவில் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய 8 அணிகளும் தலா 8 வெளிநாட்டு வீரர்களுடன் முழுப்பலத்தைப் பெற்றுள்ளன.
குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தலா 7 வெளிநாட்டு வீரர்களைத் தமது குழாமில் கொண்டுள்ளன.
திறமையான இளம் வீரர்களும் அனுபவம் வாய்ந்த சர்வதேச நட்சத்திரங்களும் ஏலத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். 2026 தொடர் முன்னெப்போதையும் விட அதிக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
எண்
|
வீரர் பெயர்
|
அணி
|
விலை (இந்திய ரூபாய்)
|
|
1
|
கெமரூன் க்ரீன்
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 25.20 கோடி
|
|
2
|
மதீஷ பத்திரன
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 18.00 கோடி
|
|
3
|
பிரசாந்த் வீர்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 14.20 கோடி
|
|
4
|
கார்த்திக் சர்மா
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 14.20 கோடி
|
|
5
|
லியாம் லிவிங்ஸ்டோன்
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 13.00 கோடி
|
|
6
|
முஸ்தபிசுர் ரஹ்மான்
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 9.20 கோடி
|
|
7
|
ஜோஷ் இங்கிலிஸ்
|
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)
|
ரூ. 8.60 கோடி
|
|
8
|
ஆகிப் நபி தார்
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 8.40 கோடி
|
|
9
|
ரவி பிஷ்னோய்
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 7.20 கோடி
|
|
10
|
வெங்கடேஷ் ஐயர்
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 7.00 கோடி
|
|
11
|
ஜேசன் ஹோல்டர்
|
குஜராத் டைட்டன்ஸ் (GT)
|
ரூ. 7.00 கோடி
|
|
12
|
மங்கேஷ் யாதவ்
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 5.20 கோடி
|
|
13
|
ராகுல் சாஹர்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 5.20 கோடி
|
|
14
|
பென் வார்ஷுயிஸ்
|
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
|
ரூ. 4.40 கோடி
|
|
15
|
பெதும் நிஸ்ஸங்க
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 4.00 கோடி
|
|
16
|
ஜாக் எட்வர்ட்ஸ்
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 3.00 கோடி
|
|
17
|
கூப்பர் கோனோலி
|
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
|
ரூ. 3.00 கோடி
|
|
18
|
தேஜஸ்வி தஹியா
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 3.00 கோடி
|
|
19
|
முகுல் சௌத்ரி
|
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)
|
ரூ. 2.60 கோடி
|
|
20
|
ஆடம் மில்னே
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 2.40 கோடி
|
|
21
|
அக்ஷத் ரகுவன்ஷி
|
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)
|
ரூ. 2.20 கோடி
|
|
22
|
டேவிட் மில்லர்
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 2.00 கோடி
|
|
23
|
வனிந்து ஹசரங்க
|
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)
|
ரூ. 2.00 கோடி
|
|
24
|
பென் டக்கெட்
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 2.00 கோடி
|
|
25
|
ஃபின் ஆலன்
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 2.00 கோடி
|
|
26
|
ஜேக்கப் டஃபி
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 2.00 கோடி
|
|
27
|
அன்ரிச் நோர்க்கியா
|
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)
|
ரூ. 2.00 கோடி
|
|
28
|
அகீல் ஹொசைன்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 2.00 கோடி
|
|
29
|
ரச்சின் ரவீந்திரா
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 2.00 கோடி
|
|
30
|
மாட் ஹென்றி
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 2.00 கோடி
|
|
31
|
லுங்கி என்கிடி
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 2.00 கோடி
|
|
32
|
டொம் பான்டன்
|
குஜராத் டைட்டன்ஸ் (GT)
|
ரூ. 2.00 கோடி
|
|
33
|
கைல் ஜேமிசன்
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 2.00 கோடி
|
|
34
|
மெத்யூ ஷார்ட்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 1.50 கோடி
|
|
35
|
டிம் செய்பர்ட்
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 1.50 கோடி
|
|
36
|
சலில் அரோரா
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 1.50 கோடி
|
|
37
|
நமன் திவாரி
|
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)
|
ரூ. 1.00 கோடி
|
|
38
|
ஆகாஷ் தீப்
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 1.00 கோடி
|
|
39
|
குயின்டன் டி காக்
|
மும்பை இந்தியன்ஸ் (MI)
|
ரூ. 1.00 கோடி
|
|
40
|
ரவி சிங்
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 95 லட்சம்
|
|
41
|
அசோக் சர்மா
|
குஜராத் டைட்டன்ஸ் (GT)
|
ரூ. 90 லட்சம்
|
|
42
|
சுஷாந்த் மிஸ்ரா
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 90 லட்சம்
|
|
43
|
ராகுல் திரிபாதி
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 75 லட்சம்
|
|
44
|
சர்பராஸ் கான்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 75 லட்சம்
|
|
45
|
சிவம் மாவி
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 75 லட்சம்
|
|
46
|
ஜோர்டான் காக்ஸ்
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 75 லட்சம்
|
|
47
|
பிரித்வி ஷா
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 75 லட்சம்
|
|
48
|
சாக் ஃபவுல்க்ஸ்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 75 லட்சம்
|
|
49
|
குல்தீப் சென்
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 75 லட்சம்
|
|
50
|
லூக் வுட்
|
குஜராத் டைட்டன்ஸ் (GT)
|
ரூ. 75 லட்சம்
|
|
51
|
அமன் கான்
|
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK)
|
ரூ. 40 லட்சம்
|
|
52
|
சிவாங் குமார்
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 30 லட்சம்
|
|
53
|
கார்த்திக் தியாகி
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 30 லட்சம்
|
|
54
|
யஷ் புஞ்சா
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 30 லட்சம்
|
|
55
|
பிரசாந்த் சோலங்கி
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 30 லட்சம்
|
|
56
|
விக்னேஷ் புத்தூர்
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 30 லட்சம்
|
|
57
|
தனிஷ் மலேவர்
|
மும்பை இந்தியன்ஸ் (MI)
|
ரூ. 30 லட்சம்
|
|
58
|
சாத்விக் தேசாய்
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 30 லட்சம்
|
|
59
|
சாகிப் உசேன்
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 30 லட்சம்
|
|
60
|
மொஹமட் இஷார்
|
மும்பை இந்தியன்ஸ் (MI)
|
ரூ. 30 லட்சம்
|
|
61
|
ஓங்கார் தர்மலே
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 30 லட்சம்
|
|
62
|
அமித் குமார்
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 30 லட்சம்
|
|
63
|
அதர்வா அங்கோலேகர்
|
மும்பை இந்தியன்ஸ் (MI)
|
ரூ. 30 லட்சம்
|
|
64
|
பிரஃபுல் ஹிங்கே
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 30 லட்சம்
|
|
65
|
கிரைன்ஸ் ஃபுலேத்ரா
|
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
|
ரூ. 30 லட்சம்
|
|
66
|
சர்தாக் ரஞ்சன்
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 30 லட்சம்
|
|
67
|
தக்ஷ் காம்ரா
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
|
ரூ. 30 லட்சம்
|
|
68
|
அமன் ராவ்
|
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)
|
ரூ. 30 லட்சம்
|
|
69
|
மயங்க் ராவத்
|
மும்பை இந்தியன்ஸ் (MI)
|
ரூ. 30 லட்சம்
|
|
70
|
பிரவீன் துபே
|
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
|
ரூ. 30 லட்சம்
|
|
71
|
சாஹில் பராக்
|
டெல்லி கெப்பிடல்ஸ் (DC)
|
ரூ. 30 லட்சம்
|
|
72
|
விஷால் நிஷாத்
|
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
|
ரூ. 30 லட்சம்
|
|
73
|
பிரிஜேஷ் சர்மா
|
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
|
ரூ. 30 லட்சம்
|
|
74
|
விக்கி ஓஸ்ட்வால்
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 30 லட்சம்
|
|
75
|
பிரித்வி ராஜ்
|
குஜராத் டைட்டன்ஸ் (GT)
|
ரூ. 30 லட்சம்
|
|
76
|
விஹான் மல்ஹோத்ரா
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 30 லட்சம்
|
|
77
|
கனிஷ்க் சௌஹான்
|
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
|
ரூ. 30 லட்சம்
|
Latest News
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்!
போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன்: சமூக வலைதளக் காணொளியால் பரபரப்பு - காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை!
வருமான வரி வழக்கு: மாட்டிக்கொண்டார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு: டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
வோஷிங்டன் போஸ்ட்' செய்தி முழுமையான பொய்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சாடல்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சுற்றுலா ஆய்வுப் பயணம்!
யுக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
அமெரிக்க கால்பந்துப் போட்டியில் கனடா தேசிய கீதம்: எல்லை தாண்டிய பாசமும் வர்த்தகப் போரும்