பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு, தோஷகானா 2 வழக்கில் தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு விசேட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசரினால் அவருக்கு விலையுயர்ந்த 'பல்காரி' (Bulgari) ஆபரணத் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அரச விதிகளின்படி வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெறப்படும் இவ்வாறான அன்பளிப்புகள் அரசாங்க திறைசேரி 'தோஷகானா'வில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இருப்பினும், குறித்த ஆபரணத் தொகுதியின் உண்மையான பெறுமதியை விட மிகவும் குறைவான மதிப்பீட்டைக் காண்பித்து, சட்டவிரோதமான முறையில் அதனை அவர்கள் கொள்வனவு செய்ததாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நீண்டகால சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையிலுள்ள இம்ரான் கானுக்கு இந்தத் தீர்ப்பு மற்றுமொரு பெரும் பின்னடைவாகக் கருதப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?
Local
23 September 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
23 September 2026
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
23 September 2026
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
Local
23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
Local
23 September 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Local
23 September 2026