2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கையூட்டல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்திலிருந்தாலும், கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை பின்தங்கியே உள்ளது.
இது ஏனைய துறைகளின் தரவரிசையில், பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் எழுச்சியின் முக்கிய கோஷம், கையூட்டல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டுக்கள் கையூட்டல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, கையூட்டல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
அரச ஊழியர்கள், மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கக் கடமைப்பட்டுள்ளதால் அரச அதிகாரிகள் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் 121ஆவது இடத்தில் உள்ள நிலையில், இந்தியா 93 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 135 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 149 இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
23 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026
தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Local
22 September 2026
ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent 'MUSE'
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Local
22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
Local
22 September 2026