General30 January 2026

சிறுமியின் துயரத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி : மதகுருவுக்கு 10 ஆண்டு கடூழியச் சிறை

புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுரு ஒருவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 
 
2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில், தேவாலய கட்டுமானப் பணியின் போது குறித்த மதகுரு, சிறுமியை பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது இதனையடுத்து 2025 ஆம் ஆண்டு, புத்தளம் மேல் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. 
 
எனினும் அந்த தீர்ப்பை எதிர்த்து மதகுரு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவையே, நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes