General30 January 2026

தங்க விலையில் பெரும் வீழ்ச்சி : பவுணுக்கு ரூ. 20,000 குறைவு

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 
 
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது. 
 
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 
 
ஆபரணத் தங்கம் பவுணுக்கு (இந்திய மதிப்பில்) ரூ. 4,800 குறைந்து, ஒரு பவுண் ரூ. 129,600 க்கும், ஒரு கிராம் ரூ. 16,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Recomands
Hiru TV News | Programmes