General30 January 2026

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 13 வரை நீடிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார். 
 
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது, 'சதொச' நிறுவனத்திற்குச் சொந்தமான பாரவூர்தி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Related Recomands
Hiru TV News | Programmes