General31 January 2026

கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் இன்றும் நாளையும் தாமதம்

கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் இன்றும் (31) நாளையும் (01) காலை மற்றும் மாலை சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
 
கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான மேல் மற்றும் கீழ் பாதைகளில் இயக்கக்கூடிய தொடருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சமிக்ஞை அமைப்பில் தேவையான மேம்படுத்தல் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes