General07 February 2026

டி20 உலக கிண்ணத்தை கொண்டாடும் கூகுல்

சர்வதேச ரீதியில் ஆரம்பமாகியுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடரைக் கொண்டாடும் வகையில், கூகுள் தேடுபொறி தளம் தனது முகப்புப் பக்கத்தில் புதிய டூல்ஸ் (Doodle) ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக இந்த விசேட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

'Google' என்ற எழுத்துக்களுடன் கிரிக்கெட் பந்து, துடுப்பு மற்றும் விக்கெட்டுகள் ஆகியன மிகவும் வர்ணமயமாக இணைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுப் போட்டிகளின் விறுவிறுப்பைப் பிரதிபலிக்கும் வகையில் துடுப்பாட்ட வீரர் பந்தை அடிப்பது போன்ற தோற்றமும், ரசிகர்களின் ஆரவாரத்தைக் குறிக்கும் இசைக்கருவிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலகத்தரம் வாய்ந்த பாரிய விளையாட்டுத் தொடர்கள் ஆரம்பமாகும் போது, அது தொடர்பான விழிப்புணர்வையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் கூகுள் இவ்வாறான விசேட சித்திரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய சித்திர இலச்சினையானது தற்போது இணையப் பயனாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes