அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (28) நிதி அமைச்சில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பணிகளை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையைப் பேணவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகுதியான பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற நீண்டகால நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தற்போதைய பிரச்சினைகளுக்குக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை இனங்காண்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
குறித்த திட்டத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புதல், கிராம உத்தியோகத்தர்களை முழுமையாகச் செயலில் ஈடுபடுத்துதல் மற்றும் கொடுப்பனவு முறையிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Latest News
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026
IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!
Local
24 September 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
24 September 2026
அனோஜனின் உயிரைக் காக்க மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் பூரண ஆதரவு!
Local
24 September 2026
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு தொடரும் 'ஹிட் விக்கெட்' சரிவு: ஹிரு ஸ்போர்ட்ஸ் ஆய்வு தகவல்!
Local
23 September 2026
வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?
Local
23 September 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
23 September 2026
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026