பாகிஸ்தானுக்குச் சென்று நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது தொலைபேசி ஊடாகவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஒரு காகிதத்தைப் பார்ப்பதற்காக 18 மணிநேரம் வானூர்தியில் பறப்பது தேவையற்றது என தெரிவித்த அவர், தொலைபேசி வழியாகவே பேசி வருவது, மிகவும் வசதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நீண்ட தூரம் கடந்து வந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவைத் தருமா? என்பதே தற்போதைய கேள்வி எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
'பொறுமை இழந்து வருவதாக' ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ள சூழலில், ட்ரம்ப்பின் இந்தத் தகவல் அமைதிக்கான ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
அத்துடன் "அவர்கள் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வரை, எந்தவித உடன்படிக்கையும் எட்டப்படாது" என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
ஆனால், தற்போது நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர தொடர்புகள் தொலைபேசி வாயிலாகவே தொடர்கின்றன.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பதிலாக, புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
யாழ்-அநுராதபுரம் தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
Local
30 April 2026
குளித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது
Local
30 April 2026
அமெரிக்காவிற்கு அனுப்பிய 625,000 அமெரிக்க டொலர் பணம் மாயம் : வங்கி கணக்கு மாற்றப்பட்டதாக கூறி இணைய மோசடி!
Local
30 April 2026
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
Local
30 April 2026
பருத்தித்துறை கடற்றொழிலாளருக்கு நேர்ந்த கதி : "அவர்கள் கொள்ளையர்கள் அல்ல" - தமிழக பத்திரிக்கைகளுக்கு பதிலடி
Local
30 April 2026
மின்சாரக் கட்டண உயர்வு: 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு
Local
30 April 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க மெகா திட்டம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அவசர உத்தரவு!
Local
30 April 2026
பல பகுதிகளுக்கு இன்று இடியுடன் கூடிய மழை
Local
30 April 2026
பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!
Local
30 April 2026
அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம் : ஈரானுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி நிபந்தனை
Local
30 April 2026