மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
டிட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுகளும், கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதையும் பார்க்கவும்..
Latest News
குளித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது
Local
30 April 2026
அமெரிக்காவிற்கு அனுப்பிய 625,000 அமெரிக்க டொலர் பணம் மாயம் : வங்கி கணக்கு மாற்றப்பட்டதாக கூறி இணைய மோசடி!
Local
30 April 2026
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
Local
30 April 2026
பருத்தித்துறை கடற்றொழிலாளருக்கு நேர்ந்த கதி : "அவர்கள் கொள்ளையர்கள் அல்ல" - தமிழக பத்திரிக்கைகளுக்கு பதிலடி
Local
30 April 2026
மின்சாரக் கட்டண உயர்வு: 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு
Local
30 April 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க மெகா திட்டம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அவசர உத்தரவு!
Local
30 April 2026
பல பகுதிகளுக்கு இன்று இடியுடன் கூடிய மழை
Local
30 April 2026
பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!
Local
30 April 2026
அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம் : ஈரானுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி நிபந்தனை
Local
30 April 2026
ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கிய மாணவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Local
30 April 2026