யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கியமை தொடர்பில் 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 16 ஆசிரியர்கள் அடங்கிய குழு நிழற்படத்தை குறித்த மாணவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கும் வகையில் தயார் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்தAi நிழற்படத்தை வட்ஸ்அப் ஊடாகவும் மாணவர்கள் பகிர்ந்துள்ளதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலை நிர்வாகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் அவர்கள் பிரசன்னப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அதன்படி, மாணவர்களை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் பார்க்க..
Latest News
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
Local
30 April 2026
பருத்தித்துறை கடற்றொழிலாளருக்கு நேர்ந்த கதி : "அவர்கள் கொள்ளையர்கள் அல்ல" - தமிழக பத்திரிக்கைகளுக்கு பதிலடி
Local
30 April 2026
மின்சாரக் கட்டண உயர்வு: 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு
Local
30 April 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க மெகா திட்டம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அவசர உத்தரவு!
Local
30 April 2026
பல பகுதிகளுக்கு இன்று இடியுடன் கூடிய மழை
Local
30 April 2026
பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!
Local
30 April 2026
அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம் : ஈரானுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி நிபந்தனை
Local
30 April 2026
ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கிய மாணவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Local
30 April 2026
4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
30 April 2026
தவெக ஆட்சியமைக்கும்? Axis My Indiaவின் கருத்துக்கணிப்பினால் எகிறும் எதிர்பார்ப்பு
Local
30 April 2026