2026 ஆம் ஆண்டுக்கான உணவு நெருக்கடி குறித்த உலகளாவிய அறிக்கை (Global Report on Food Crises), பங்களாதேஷின் உணவுப் பாதுகாப்பு நிலைவரம் குறித்து 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் தற்போது பாரிய பஞ்சத்தையோ அல்லது பாரிய அளவிலான உணவுப் பற்றாக்குறையையோ எதிர்கொள்ளவில்லை என்ற போதிலும், உணவுப் பாதுகாப்பின்மை நிலவும் உலகின் மோசமான 10 நாடுகளின் பட்டியலில் அது உள்வாங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் உச்சக்கட்டத்தின் போது, பங்களாதேஷில் சுமார் 1.6 கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். இதில் 1.56 கோடி மக்கள் நெருக்கடி நிலையிலும், 4 இலட்சம் மக்கள் அவசர நிலையிலும் இருந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனினும், இந்த அறிக்கையானது பங்களாதேஷின் மொத்த மக்கள் தொகையில் 59 சதவீதமானோரை மாத்திரமே ஆய்வுக்கு உட்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 இல் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை 76 இலட்சத்தால் குறைந்துள்ளது.
2025 இன் முற்பகுதியில் பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாதது, பணவீக்கம் குறைவடைந்தது மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பணவரவு அதிகரித்தது ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் குறைந்த மற்றும் பொருளாதார ரீதியில் ஓரளவு ஸ்திரத்தன்மை நிலவிய ஒரு சாதகமான ஆண்டிலேயே, பங்களாதேஷ் உலக அளவில் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்திருப்பது கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷின் உணவுப் பாதுகாப்பின்மை என்பது வெறும் வெள்ளம், சூறாவளி அல்லது திடீர் விலை அதிகரிப்பு போன்ற தற்காலிக காரணிகளுடன் மாத்திரம் தொடர்புடையது அல்ல என்பதை இது காட்டுகிறது. மாறாக, அங்கு நிலவும் உணவுப் பிரச்சினை என்பது மிகவும் ஆழமான கட்டமைப்பு ரீதியான பிரச்சினையாக மாறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் காலங்களில், ஏற்கனவே வறுமையில் உள்ள குடும்பங்கள் மிக வேகமாகப் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Latest News
மே தினப் பேரணிகளைத் தவிர்க்கும் முக்கிய கட்சிகள்: மக்கள் செல்வாக்கை நிரூபிக்கப் போவது யார்?
Local
30 April 2026
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 'ஆயுஷ்' புலமைப்பரிசில் - விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
Local
30 April 2026
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு
Local
30 April 2026
ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் ட்ரம்ப்புடன் சந்திப்பு - விண்வெளி மற்றும் உலக அரசியல் குறித்து கலந்துரையாடல்
Local
30 April 2026
உண்மையில் விஜய்யின் தவெக 120 இடங்களில் வெல்லுமா? - இதற்குமுன் ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்புகள் எப்படி?
Local
30 April 2026
ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!
Local
30 April 2026
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய சவால் - அணித் தலைவரால் அனைத்து ஐ.பி.எல். வீரர்களுக்கும் சிக்கல்
Local
30 April 2026
பிரான்ஸ் கார் பந்தய களத்தில் அஜித் - வைரலாகும் காணொளி
Local
30 April 2026
முருங்கை மரத்தின் புதியதொரு அதிசயம் : பிளாஸ்டிக் துகள்களை அழிக்கும் விதைகளைப் பற்றித் தெரியுமா?
Local
30 April 2026
ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு
Local
30 April 2026